பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் ஓ.கே கண்மணி, நாய் சேகர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் அலர்ஜி ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இதற்கு நடிகை விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை. அதேபோன்று நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை. இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களுடைய பொழுதுபோக்கிற்காக என்னுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள். எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.