பச்சன் குடும்பத்தினர் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் சமீபமாக மீடியா மற்றும் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளனர். அபிஷேக் பச்சனுடன், அவருக்கு ஆன விவாகரத்து குறித்து பரவலான செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் பின்னணியில், ஜெயா பச்சன் மற்றும் ஐஸ்வர்யா இடையே உறவு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் அவர்களது பிரிவுக்கான முக்கிய காரணமாக சில செய்திகளில் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு பிலிம் ஃபேர் விருதுவிழாவில் ஜெயா பச்சன் ஐஸ்வர்யாவை தனது குடும்பத்தில் வரவேற்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த விழாவில் மேடையிலே விருது பெற வந்த ஜெயா பச்சன், “நான் மீண்டும் ஒரு அழகான, பண்புடன் கூடிய, மரியாதை மிக்க புன்னகையுள்ள பெண்ணின் மாமியாராக இருக்கப் போகிறேன். நம் குடும்பத்தில் வரவேற்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேன்” என உருக்கமாக பேசினார்.

இந்த வார்த்தைகள் ஐஸ்வர்யாவின் கண்களில் கண்ணீரைக் கொட்ட செய்தன. ஜெயாவின் இந்த உருக்கமான வரவேற்பு அந்த நேரத்தில் அனைவரையும் தொட்டது. இப்போது அந்த வீடியோ மீண்டும் வைரலாகி, கடந்த காலத்தின் இனிய நினைவுகளை காட்டுகிறது. இதேபோல், ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியிலும் ஜெயா பச்சன், ஐஸ்வர்யா குறித்து பேசும் போது, “அவள் ஒரு பெரிய நட்சத்திரம் என்றாலும், எப்போதும் அமைதியாக, தன்னை பின்னால் வைத்துக் கொள்கிறார்.

எல்லாவற்றையும் கவனிக்கிறார், கற்றுக்கொள்கிறார். அவர் நம் குடும்பத்திலும், நண்பர்களிலும் எளிதாக கலந்து கொண்டார். அவர் ஒரு வலிமையான பெண். அவருக்கு நிறைய மரியாதை இருக்கிறது” என பாராட்டியிருந்தார். 2007-ல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தற்போது ஆராத்யா என்ற மகளின் பெற்றோராக இருக்கின்றனர்.