
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என்று உதயநிதி சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
நான் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வார்த்தை சொன்னேன். அதாவது 2024 தேர்தலிலும் சரி, 2026 தேர்தலிலும் சரி சனாதன தருமத்தை மையமாக வைத்து, தமிழகத்துல நாம் தேர்தலை எதிர்கொள்ளலாம். திராவிட முன்னேற்ற கழகம் தயாரா ? அவங்களுக்கு தெரியும்.
சனாதன தருமத்தை எப்படி சுத்தி வளைச்சி, பொய் பேசினாலும் கூட சனாதன தருமம் என்பது என்னுடைய பேச்சில்…. நான் சனாதன தருமத்தை டிப்பன் பண்ணி சொல்லுறேன் அப்படின்னா….. ஜாதிகள் இருக்கு. உயர் ஜாதி, கீழ் ஜாதி அப்படின்னு ஒன்னு இருக்குன்னா நானே ஏத்துக்க மாட்டேன். நானே ஏத்துக்க போறது கிடையாது. ஜாதிக்கு எதிரிதான் முதல் எதிரி நானு… ஆனால் சனாதன தருமத்தில் அது இல்ல என சொல்லுறேன்.
சில மனிதர்கள்… சில கால கட்டத்துல கொண்டு வந்தாங்கன்னா…. வேறு மனிதர்கள், வேறு கால கட்டத்துல எதிர்த்து நின்னுருக்காங்க…. இவங்க ஏதோஒன்னை புடிச்சுகிட்டு, இதனால நான் எதிர்க்கிறேன் என சொல்லுறது முட்டாள் தனம்.அண்ணாமலை ஜாதிகள் இருக்கு. மேல் ஜாதி, கீழ் ஜாதி இருக்கு அதை ஏத்துகிறாரா ? ஏத்துக்கல.. சனாதன தருமத்தில் அது இருக்கா? இல்லை. இருக்குன்னு சொன்னா வாங்க விவாதிப்போம் என தெரிவித்தார்.