தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர்  சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் திமுக சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது இங்க இங்கு நிறைய அரசியல்வாதிகள் உள்ளனர். நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி உள்ளனர். ஆனால் நான் எப்போதும் போல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.