இந்தி சினிமாவில் பல்வேறு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல் என்பவர் நடித்துள்ளார். இவர் தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எம் பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி செய்திகளில் இடம்பெறக் கூடியவர் ஆவர். அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கூறியதாவது, படப்பிடிப்பின் போது எனது காலில் காயம் ஏற்பட்டது.

 

மருத்துவமனையில் இருந்தபோது அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை சந்திக்க வந்தார். நீங்கள் சீக்கிரம் குணமடைய காலை எழுந்ததும் உங்கள் சிறுநீரை அருந்துங்கள் என்று ஆலோசனை கூறினார். அதே நேரத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்க கூறினார். அவர் சொன்னது போல நானும் தினமும் காலை எழுந்ததும் என் சிறுநீரை பீர் குடிப்பது போல ஒரே மூச்சாக குடித்தேன்.

15 நாட்கள் இப்படி செய்தேன். மருத்துவர் என் எக்ஸ்ரேவை பார்த்து ஆச்சரியப்படும் அளவு நான் சீக்கிரம் குணமடைந்து வந்தேன். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இரண்டு மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒன்றரை மாதத்தில் நான் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன் என்று அவர் தெரிவித்தார். இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் நம் நாடு முன்னேற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று பதிவு செய்து வருகின்றனர்.