
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வரும் விடுதலை படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி களிமண்ணாக இருந்த என்னை வெற்றிமாறன் தான் செதுக்கினார் என்று கூறினார்.
அதன் பிறகு நான் அவருடைய உணர்வுகளை புரிந்து தான் நடித்தேன். இந்த படத்தின் பெரு வெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்து தான் பிறந்தது. நான் ஒருவேளை சரக்கடித்து இருந்தாலும் வெற்றி மாறன் சாரிடம் மட்டும் மரியாதையாகத் தான் பேசுவேன். என்னுடைய சிந்தனை நிலை மாறினாலும் அவர் மீது இருக்கும் மரியாதை மட்டும் ஒருபோதும் மாறாது. அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன். நல்லவேளை நான் பெண்ணாக பிறக்கவில்லை. ஒருவேளை அப்படி பிறந்திருந்தால் நான் வெற்றிமாறன் சாரை உஷார் பண்ணி இருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போது கூட அவரை பார்த்து என்னால் பேச முடியவில்லை. ரொம்ப கூச்சமாக இருக்கிறது என்று கூறினார்.