டெல்லியில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் டக்ஷ் சேதி என்பவர் பயணித்துள்ளார். அப்போது மூன்று பேர் கொண்ட இருக்கையில் இவருடன் சேர்ந்து மற்ற இருவரும் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் விமான புறப்பட்ட சில நொடிகளில் திடீரென அந்த இருக்கை பின்னோக்கி சாயத்தொடங்கியது. இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இருக்கைகள் பின்னோக்கி சாய்ந்ததால் எனக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இது போன்ற அனுபவம் நடுவானில் நிச்சயமாக வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு காரணம் இருக்கைகள் தவறாக பொருத்தப்பட்டது தான். இது குறித்து விமான பணியாளர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் உடனடியாக வேறு இருக்கைகளுக்கு எங்களை மாற்றினார்கள். இறங்கிய பிறகு, பராமரிப்பு குழு இதை சரிபார்க்கும் என்று உறுதி அளித்தனர். இது பயணிகளுக்கான பாதுகாப்பை குறித்து பெரும் கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Daksh Sethi (@thewolfofjobstreet)