
சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராஜபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பள்ளியில் உள்ள மாணவர்களை கால் அமுக்கி விடுமாறு துன்புறுத்துவதாகவும், பள்ளியில் குடிபோதையில் தூங்குவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
தற்போது இவர் பள்ளி மாணவர் ஒருவரை கால் அமுக்க வைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர். இந்த புகைப்படம் குறித்து விசாரணை நடத்தவும், மேலும் கணித ஆசிரியர் ஜெயப்பிரகாசினை பணியிடை நீக்கம் செய்யக்கோரி சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.