
பெங்களூரில் பவன் கவுடா என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றுமாறு மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனது ஆடைகளை கழற்றி, மீண்டும் அணிந்த பிறகு அவரை மீண்டும் அடித்து நிர்வாணமாக இருக்க கூறியுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபரை உடைகள் எதுவும் இல்லாமல் உன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ளும்படி கூறியுள்ளார். அதோடு பவன் அந்த வாலிபரின் முகத்தில் அடித்துள்ளார்.
இதனால் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதனை பவன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அவர் அந்த வாலிபரை எதற்கு தாக்கினார் என்பது குறித்து தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை, அடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.