சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பர் மாவட்டத்தில் கரண்(26) மற்றும் அவரது மனைவியும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கரண் தனது மனைவியிடம் குடிக்க ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கரண் குடிபோதையில் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மிரட்டி உள்ளார். இதையடுத்து அங்கு கூடிய மக்கள், அவரிடம் பணம் கொடுப்பதாகவும், மது பாட்டில் வாங்கி தருவதாகவும் கூறி கீழே இறங்குமாறு கூறினர்.

அதோடு அவரது தாயாரும் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கீழே இறங்குமாறு கெஞ்சியுள்ளார். இருப்பினும் அவர் கீழே இறங்கவில்லை. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் கரணை கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அவ்வபோது கீழே இறங்கி வரும் கரண் மீண்டும் மேலே ஏறி போலீசருக்கு நீண்ட நேரம் போக்கு காட்டியுள்ளார். அதன் பின் நீண்ட நேரம் கழித்து கரண் கீழே இறங்கி வந்தார்.