பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது காரில் கத்ரிகுப்பே சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் பயணித்த ஆட்டோ ரிக்‌ஷா, அந்தப் பெண்ணின் காரை ஆபத்தான முறையில் கடந்து சென்று, மற்ற 2 வாகனங்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் அமைதியாக இருந்த போதும், முற்பகுதியில் இருந்த பயணி ஒருவர் போக்குவரத்து சிக்னலில் அந்தப் பெண்ணை அணுகி அவளையும் அவளது தாயையும் புண்படுத்தும் பெயர்களை கூறி, ஆவாசமாக கைகளை அசைத்து வெளிப்படையான பாலியல் மிரட்டல் கொடுத்து அசிங்கப்படுத்தினார்.

“>

 

இதனை அந்த காரில் இருந்தவர்கள் அவர்களது செல்போனில் வீடியோபதிவு செய்தனர். இதனைப் பார்த்த அந்த நபர் இந்த வீடியோ பகிரப்பட்டால் அவர்கள் குடும்பத்தினரை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதோடு காரின் கதவை உடைக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது அடுத்து காவல்துறையினரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து தலைமறைவாக இருக்கும் வாலிபரை தேடி வருகின்றனர்.