
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் என்னும் பகுதியில் விஜய் யசோதரன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் ஆயுதப்படை முகாமில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், கொச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதால் அவர் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அந்த பெண் மருத்துவரிடமிருந்து மறைத்துள்ளார்.
இதையடுத்து அவர் அந்த பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை திருவனந்தபுரத்திற்கு பலமுறை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் அவர் அந்த பெண் மருத்துவரின் நகைகளையும் அவரிடமிருந்து பறித்துள்ளார். இதற்கிடையில், பெண் மருத்துவருக்கு அவர் திருமணம் ஆனவர் என்பது தெரியவந்ததையடுத்து அவர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் தலை மறைவான ஆயுதப்படை காவலரை தேடி வருகின்றனர்.