
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பாகிஸ்தான் நட்சத்திரம் ஐசிசியின் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார்.
ஐசிசி 2022 ஆம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த ஒருநாள் போட்டி வீரராக பாபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு விளையாடிய 9 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 84.87 சராசரியில் 679 ரன்கள் எடுத்த பாபர் சிறந்த ஒருநாள் வீரராக இருந்தார்.
கடந்த ஆண்டு விளையாடிய 9 போட்டிகளில் பாபர் 3 சதங்கள் மற்றும் 5 அரை சதங்களை அடித்தார். பாபர் விளையாடிய ஒரு போட்டியில் மட்டும் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தார். பாபரின் சிறப்பான ஆட்டத்தால் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தொடரை இழப்பதைத் தவிர்க்க 349 ரன்களை சேஸ் செய்த பாபர் 73 பந்துகளில் சதம் அடித்து பாகிஸ்தானை முன்னோக்கி வழிநடத்தினார். பாபர் 45வது ஓவரில் 83 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த நிலையில் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு அவுட் ஆனார்.
பாபர் மற்றும் இமாமுல் ஹக்கின் (106) சதங்களால் 49 ஓவரில் 4 விக்கெட் இழந்து 349 ரன்கள் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் மற்றும் அவரது அணியினர் ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானால் பின்பற்றப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்தது.
அதேபோல இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஸ்கிவர் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடித்தார்.
Domination 👊
For the second year in a row, the Pakistan star has taken home the ICC Men's ODI Cricketer of the Year Award 👏#ICCAwards
— ICC (@ICC) January 26, 2023
Dominant with both bat and ball 💪
Star England all-rounder is the winner of the ICC Women's ODI Cricketer of the Year 2022 Award 🙌#ICCAwards
— ICC (@ICC) January 26, 2023