
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பயிற்சி பெறாமல் யாரும் போட்டியிலே வென்று விட முடியாது. தேர்தல் களம் அதைவிட கடுமையானசூது, சூழ்ச்சி நிறைந்த ஒரு களம். யார் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது தெரியாது ? அப்படிப்பட்ட சூது, சூழ்ச்சி நிறைந்த களம். இந்த களத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ? ஒரு நீண்ட நெடிய அனுபவம் தேவை. அதைவிட முக்கியமாக பயிற்சி தேவை.
சும்மா 40 இடத்துல 40 பேரை போட்டு நீங்க ஓட்டு கேளுங்க அப்படின்னா… கிடைக்காது ஓட்டு. முதல்ல அந்த 40 வேட்பாளரும் கடைசி வரை நான் விசிக வேட்பாளர் தான் என்கின்ற, மன உறுதியோடு நிற்பானா ? என்று சொல்ல முடியும். ஆகவே பயிற்சி தேவைப்படுகிறது. தேர்தல் களத்தில் உறுதியோடு… அந்தப் போட்டியில் உறுதியோடு நிற்பதற்கு எப்படி ஓட்டு போடணும் ? எப்படி ஓட்டு கேட்கணும் ? என்ற பயிற்சி அல்ல. அது மட்டும் கிடையாது. அதைத் தாண்டி….
எதற்காக நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம் ? எதற்காக நாம் வாக்கு சேகரிக்கிறோம் ? எதற்காக நாம் வெற்றி பெற வேண்டும் ? என்று விரும்புகிறோம். இந்த புரிதல் நமக்கு தேவை. இதுதான் இங்கே எல்லோரும் சொன்ன கருத்தியல். கருத்தியல்னா… ஏதோ வேதியியல்…. இயற்பியல் மாதிரி ஒரு சப்ஜெக்ட் என நினைக்க வேண்டாம். கருத்தியல்னா வேறொன்றும் இல்லை.
கொள்கை, கோட்பாடு என்று சொல்கிறோம்ல.. அது தான். கொள்கை, கோட்பாடு என்பதன் இன்னொரு சொல் கருத்தியல். என்ன கொள்கைக்காக நாம் தேர்தல் களத்தில் இருக்கிறோம் ? பொலிட்டிக்கல் பார்ட்டி, எலக்சன்னில் தேர்தலில் நின்னா… 4 பேரை MLA ஆக்கினால் ? அவுங்க பதவி, பவுசு, புகழ், பெருமிதம். அதுதானா இலக்கு, இல்லை. அந்த தனிநபர்கள் வெற்றி பெற்றால் ? அந்த தனி நபர்களுக்கான புகழ், அந்த தனி நபர்களுக்கான பெருமை, அந்த தனி நபர்களுக்கான செல்வாக்கு, என்பதற்காகவா தேர்தல், கிடையாது என பேசினார்.