வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயலட்சுமி  வழக்கை நான் முடிச்சு வைப்பேன். நீங்க முடிக்கிறீங்க… முடிக்கல…  நான் முடிச்சு வைப்பேன். நீதிமன்றத்தில் போய் இருக்கேன். நான் கேட்பேன்.. இவுங்க குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வந்து சொல்லணும். எட்டு தடவ கருகலைச்சேன் என சொல்லுறது என்ன  நகைச்சுவை ?

நீங்க தொலைக்காட்சியில் எட்டு கொலை பண்ணினார்  சீமான் அப்படின்னா….  பாக்குறவன் என்ன நினைப்பான் ? என்ன கொலை பண்ணிட்டாரா ? அதுக்கு எல்லாம் ஒரு சான்று இருக்கணும் இல்ல. திருமணமானம் செஞ்சேன் என்றால் ? எப்படி திருட்டுதனமா   திருமணம் பண்ண முடியும்? ஒரு ரசீது கொடுத்து இருப்பாங்க இல்ல,  அது என்க ? திருமணம் பண்ணுனது உண்மைனா… நான் என் மனைவியை திருமணம் பண்ணும் போது  நீங்க அந்த சான்றை  கொண்டு வந்து காட்டி இருக்கலாமே.

மொத மொத புகார் அளித்தார்கள் 2011ல் … அப்போது காட்டி இருக்கலாமே…  சும்மா வாய்க்கு வந்ததை பேசிட்டு போறதா ? அத சகித்துக் கொண்டு போறதா ? மௌனமாக இருக்கும் போது அதிகப்படியான பொய்கள் பேசப்படுவது என்கிறான். என்னுடைய மௌனத்தில் நீங்க ரொம்ப பொய் பேசிட்டீங்க. அதுக்கு காரணம், நான் ஆகப்பெறும் ஜனநாயகவாதி என்பதால்…  என் பிள்ளைகளை பழியிட்டுறக்  கூடாது என்று தான் நான் இருந்தேன்.

இனி எவனுமே இல்ல. நானே வருவேன்.  நீ பேசு.. நானே வந்து நிற்பேன்.  இன்னொரு தடவை சொல்லு… அதான் கூப்பிட்டேன்… ரெண்டு பேரையும் உட்கார வைத்து, என்னையும் உட்கார வைத்து விசாரிச்சுரு  ஒரே தடவ முற்று பெற்றுடும். என் முன்னாடி முகத்துக்கு நேரா சொல்லனும் இல்ல. ஏன் ஓடிப் போனீங்க… ? என தெரிவித்தார்.