
அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் அப்பா பெயரில் இங்கு ஒரு சில, அங்கு ஒரு சிலை என திரும்புன பக்கங்கள் எல்லாம் சிலை. திரும்புன திட்டத்துக்கு எல்லாம் அவங்க அப்பா பெயர். இப்போ உங்க அப்பா பெயர் வைக்கிறீங்க. கருணாநிதி டாஸ்மார்க் என வச்சிக்கோங்க. அந்த வார்த்தைக்கே மரியாதை இல்லாம போச்சு. அந்த மாதிரி சர்வாதிகாரியாக ஆயிடுவேன், அடக்கிருவேன், ஒடுக்கிடுவேன்.
சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவேன், எல்லாத்தையும் தேடினும் பாலுமாக ஓட விடுவேன் அந்த அளவுக்கு பொய். வாயை திறந்தால் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் பொய்.. பொய். பொய் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஒரு அரசு இந்த விடியாத அரசு தான். கழகம் ஒரு குடும்பம் கிடையாது, குடும்பமே கழகம் என்ற வகையில் ஒரு கழகத்தை தன்னுடைய குடும்ப ஆதிக்கத்திலேயே கொண்டு வந்து , குடும்ப ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே நடைபெறுகின்றது.
இது திமுகவில் இருக்கிறவர்களுக்கு தெரிவதில்லை. குடும்ப பாசம் உணர்வு மிக்க இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கி, அதன் அடிப்படையிலேயே செயல்படுகின்றது. திமுகவை பொருத்தவரையில் ஒரு வாரிசு அரசியல்… ஒரு குடும்ப அரசியல்… அப்பா, புள்ள, பேரன். அப்புறம் இன்னொரு பேரன். இது கூட புல் ஸ்டாப் வச்சிருவாங்க. இனிமேல் தமிழ்நாட்டுல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு வராது என தெரிவித்தார்.