அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல “ஸ்பீடு” என்ற யூடியூபர் சுமார் 84 லட்சம் மதிப்புள்ள சீன ரோபோ நாய் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் பிறகு அதற்கு பல கமெண்ட்களை கொடுத்து அந்த ரோபோ நாயை செய்யும்படி கட்டளையிட்டார். இந்நிலையில் ஸ்பீடு தனது வீட்டின் பின்புறம் இருக்கும் நீச்சல் குளத்தில் வைத்து அந்த ரோபோ நாயிடம் குறைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் அந்த நாய் திடிரென்று எதிர்பாராத விதமாக ஸ்பீடை நெருப்பால் சுட்டது.

உடனே அவர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து உயிர் தப்பினார். இருப்பினும் அந்த ரோபோ நாய் மீண்டும் அவரை நோக்கி சுட்டது. இதனை மற்றொருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 3 நாட்களில் 4.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.