சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார், தேவகிஷ், தேவராஜ் ஆகிய மூன்று பேரும் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர். நேற்று காலை சச்சின் குமார் மட்டும் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து என்னை மன்னித்து விடுங்கள் நான் நலமாக இல்லை என ஆங்கிலத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து மதியம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த தேவகிஷ் சச்சின் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சச்சின் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.