அமெரிக்க நாட்டில் ஜான் ஹென்றி‌ என்ற சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு 5 மாதம் இருக்கும்போது இதயத்தில் கோளாறு ஏற்பட்டது. பிறக்கும்போதே இதய பிரச்சினைகளால் பிறந்த சிறுவனுக்கு  தற்காலிக தீர்வுக்காக ஆபரேஷன் செய்யப்பட்டது. இருப்பினும் இதயமாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் நிரந்தர தீர்வு என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் கடந்த 6 மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

இந்த சிறுவனுக்கு தற்போது 6 வயது ஆகும் நிலையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய தானமாக இதயம் கிடைத்துள்ளது. கடந்த 6 வருடங்களாக புதிய இதயத்துக்காக காத்திருந்த சிறுவனுக்கு தற்போதுதான்  இதயம் கிடைத்துள்ளது. இது சிறுவனுக்கும் அவருடைய பெற்றோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆபரேஷனுக்கு முன்னதாக குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். மேலும் மருத்துவ உபகரணங்களை மாட்டியபடியே  நான் புதிய இதயத்தை பெறப்போகிறேன் என்று கூறி சிறுவன் உற்சாகமாக கூறியது தொடர்பான வீடியோ  இணையத்தில் மிகவும் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.