
பிரபல டிவி தொகுப்பாளராக இருப்பவர் ராபர்ட் அல்லேவா. இவர் உலகின் மிக பழமையான நைல் முதலையான ஹென்றியை காண சென்றிருந்தார். அந்த முதலைக்கு 124 வயதாகிறது. இந்நிலையில் அல்லேவா அந்த முதலையை அருகில் சென்று பார்க்க முயற்சித்தார். அப்போது அந்த முதலை எச்சரிக்கையாக தனது வாயை அகலமாக திறந்து சத்தமிட்டது. இதனை பார்த்த அல்லேவா பயந்தார்.
அவர் தொடர்ந்து பேசும்போது அந்த முதலை வாயை திறந்து சத்தமிட்டது. இதனை மற்றொருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram