இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்ற முயன்ற நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் உங்கள் தந்தையின் நண்பர் பேசுகிறேன் என்று கூறி, உங்களுடைய தந்தை வங்கி கணக்கில் ரூ. 12000 அனுப்ப சொன்னதாக கூறினார். அதனை கேட்ட அந்த இளம் பெண் அவரை நம்ப வைக்கும் விதமாக பதில் கொடுக்க ஆரம்பித்தார். அந்த நபர் முதலில் ரூ. 10000 பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்ததா? என்று கேட்டார். அதற்கு சிறுமி போலி குறுஞ்செய்தி என்பதை அறிந்ததும் “வந்தது” என்று பதில் கூறினார்.

அதன் பிறகு ரூ.2000 அனுப்புவதற்கு பதிலாக அவர் ரூ.20000 அனுப்பியதாக போலி குறுஞ்செய்தியை சிறுமிக்கு அனுப்பினார். பின்னர் அந்த பெண்ணிடம் ரூ. 2000 வந்ததா? என்று கேட்டதற்கு, அந்தப் பெண் “இல்லை அங்கிள், ரூ. 20000 வந்ததாக கூறினார். அப்போது அந்த நபர் சிறுமியிடம் தவறுதலாக அனுப்பிவிட்டேன், மீதி ரூ. 18,000 பணத்தை திருப்பி அனுப்பும் படி கேட்டுக் கொண்டார். இந்த சூழ்நிலையில் அந்தப் பெண் மிகவும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு அவர் அனுப்பிய போலி குறுஞ்செய்தியை திருத்தம் செய்து அவருக்கே அனுப்பினார்.

பின்னர் அங்கிள் பணம் வந்ததா என்று சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டே கேட்டார். அதனை கேட்டு அதிர்ந்து போன அந்த நபர் சிறுமியை பாராட்டி விட்டு அழைப்பை துண்டித்தார். இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த சிறுமி சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் “சிறந்த சிந்தனை” மற்றும் புத்திசாலித்தனத்தால் சிறுமி சிறப்பாக செயல்பட்டார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.