
பெங்காலி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ லேகா மித்ரா. இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ள இவர் வங்கமொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இந்நிலையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் தொல்லை தொடர்பாக கேரளாவை சேர்ந்த இயக்குனர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த 2009 ஆம் ஆண்டில் பலேரி மாணிக்கம் என்ற படம் வெளியானது. அந்தப் படத்தை இயக்குனர் ரஞ்சித் இயக்கி இருந்தார். அப்போது அந்த படத்திற்காக நடந்த ஆடிஷனில் ஸ்ரீலேகா மித்ரா கலந்து கொண்டுள்ளார். அந்த சமயம் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தபோது படம் பற்றி பேசுவதற்காக வந்த ரஞ்சித் என்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறினார்.
அதனால் பயந்து போன ஸ்ரீலேகா மித்ரா உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றதாகவும் அதன் பின் படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குனர் ரஞ்சித் “இந்த விஷயத்தில் தான் பாதிக்கப்பட்டவர் என்றும் நடிகை ஸ்ரீலேகா இதனை சட்டபூர்வமாக தொடரும் பட்சத்தில் தானும் அதை அப்படியே எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.