உலகத்திலேயே மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங்க் ஆப் கனடா 2 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது இந்த வங்கியில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக நேடைன் அன் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென கடந்த ஏப்ரல் 5ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ராயல் பாங்க் ஆப் கனடா வங்கி நேடைன் அன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் வங்கியின் விதிமுறைகளை தலைமை நீதி அதிகாரியாக இருந்த ஆன் அதே வங்கியில் தனக்கு கீழ் வேலை பார்த்து வந்த மேசன் என்பவரிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் என்றும், ப்ராஜெக்ட் கென் என்ற திட்டத்தின் மூலம் அந்த பெண்ணிற்கு தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல உதவிகளை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து வங்கி வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று மறுத்துள்ள ஆன்  தங்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான காதலும் இல்லை என்றும், நாங்கள் நண்பர்கள்தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் மீது கலங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக வங்கியிடம் நஷ்ட ஈடு கேட்டு ஆன் மற்றும் மேசன் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளனர்.