
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுக்கு தெரியும் கடந்த இரண்டு வருடங்களாக… நம்முடைய கழக ஆட்சி அமைந்து, நம்முடைய தலைவர் அவர்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், காலை சிற்றுண்டி திட்டம். மக்களை தேடி மருத்துவத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் – இல்லம் தேடி கல்வி – இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 என்ற திட்டம் இப்படி பல்வேறு திட்டங்கள்.
எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற… நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளில் மிக மிக முக்கியமான வாக்குறுதி. எல்லாரும் கேட்டுட்டு இருந்தீங்க… எப்ப கொடுப்பீங்க.. எப்ப கொடுப்பீங்கன்னு… தலைவர் அறிவிச்சிட்டாரு. கலைஞருடைய நூற்றாண்டுல.. நம்முடைய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரிலே அந்த பெயர் திட்டம். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்.
அந்தத் திட்டத்தின் முதல் கேம்பில் கிட்டத்தட்ட 10 லட்சம் மகளிர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இந்த திட்டம் மிகப்பெரிய ஒரு வெற்றி திட்டமாக அமைந்தது. 2021- சட்டமன்ற தேர்தல்ல மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித் தந்தீர்கள்.
இப்போ பேசும்போது சொன்னாங்க… தலைவருடைய பிரச்சாரம்… என்னுடைய பிரச்சாரம் முக்கியமான காரணம் என்று…. அது மட்டும் காரணம் அல்ல. இங்கே உட்கார்ந்து இருக்கிற நீங்கள் செய்த பிரச்சாரம். அதுவும் முக்கியமா… கலைஞருடைய நூற்றாண்டை கொண்டாடும்போது சொல்கிறோம்…. கலைஞர் இதுவரை ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்டவர் என்று…. தமிழ்நாட்டுக்கு ஐந்து முறை கலைஞர் முதலமைச்சராக இருந்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடியது… கழகத்துடைய மூத்த முன்னோடிகளாகிய நீங்கள் தான். நீங்கள் இல்லை என்றால் அந்த வெற்றி கிடையாது என தெரிவித்தார்.