
மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனே விற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கு மலை ஏறிக் கொண்டிருந்த நேரத்தில் சில இளைஞர்களை அவர் சந்தித்தார்.
அப்போது அந்த இளைஞர்கள் அவருக்கு சத்திரபதி சிவாஜியின் தைரியம் மற்றும் வீரக் கதைகளை சொல்வதற்கு பதிலாக மராட்டியில் உள்ள அவதூறான வார்த்தைகளை கற்றுக் கொடுத்துள்ளனர். அதனை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துவருகிறார்கள்.
माझी महाराष्ट्र पोलिसांना विनंती आहे
छत्रपती शिवाजी महाराजांच्या सिंहगड किल्ल्यावर आलेल्या परदेशी पर्यटकांसोबत टवाळखोर अवलादीच्या लोकांनी जे कृत्य केले आहे त्याचा या लोकांना असा धडा शिकवा की यांना यांचे बापच नाही यांचे आजोबा पंजोबा आठवले पाहिजेत
😡😡😡@CMOMaharashtra pic.twitter.com/vjHzk8Tt0w— दत्ता चौधरी (@DattaChoud73764) April 11, 2025
அதில் ஒருவர் “இந்திய கலாச்சாரத்தையும், மரியாதையையும் உலகிற்கு காட்ட வேண்டிய நேரத்தில், இப்படி நம் மரபை கேள்விக்குள்ளாக்கும் இளைஞர்களுக்கு காவல்துறை தக்க பாடம் புகட்ட வேண்டும்” என பதிவு செய்துள்ளார். மேலும் ஒருவர்”சிவாஜி மகாராஜரின் வீரத்தையும், புகழையும் காண பல கிலோமீட்டர்கள் பயணித்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இப்படி இழிவுபடுத்துவது வெட்கக்கேடானது” என கருத்து தெரிவித்துள்ளார் .