2024-25 கல்வி ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொது தேர்வு வருகிற மார்ச் மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் கட்டாயம் இல்லை என்றும், சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களை செய்தி பரவி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர், ஆனால் தமிழக அரசு இதை மறுத்துள்ளது. இது தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயம் இல்லை என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது. கடந்த 2006ம் ஆண்டு, தமிழக அரசின் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின் அமலுக்கு வந்தது. அதன் படி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் முதல் பாடமாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடம் எழுதுவதில் இருந்து 2020 முதல் 22 வரை சென்னை உயர்நீதிமன்றம் விளக்கு அளித்திருந்தது. இதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அது 2023 க்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு தமிழ் மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கை ஏற்று 2023 முதல் 24 வரை மட்டும் கட்டாய மொழிப்பாடமாக இருந்த தமிழ் எழுதுவதில் விளக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் அறிவித்ததாக தவறான செய்தி பரவி வருகின்றது, இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.