
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், திரையரங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் அரசு மற்றும் தயாரிப்பாளர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த அவசர கால கூட்டத்தில், திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான அனுமதி, 24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட அனுமதி, தமிழ் படங்களை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட அனுமதி, ஆபரேட்டர் லைசென்ஸ் விதிகளில் மாற்றம், மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு வழங்கப்படும் வணிக செயல்பாடுகளுக்கான அனுமதி போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், திரையரங்குகளில் டிக்கெட் விலை 20 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள், யூடியூப் போன்ற தளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளின் இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு விரைவான தீர்வு காண வேண்டும் என்பதே திரையுலகினரின் முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.