
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது நாள் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது.
ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை நிலையாக இருந்த ஒன்று மழை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான குரூப் ஸ்டேஜ் போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த சூப்பர் ஃபோர் போட்டியிலும் இடையூறு ஏற்பட்டது. இதனால் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை கூட முடிக்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் பெய்த மழையில் போட்டி நிறுத்தப்பட்டது.
இப்போட்டி ரிசர்வ் நாளான இன்று நடைபெறுகிறது. நேற்று நடுவர்கள் போட்டியை நடத்த எவ்வளவோ முயற்சி செய்தும், மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. அதனைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, மீண்டும் மழை பெய்தது. இந்த போட்டிக்கான ரிசர்வ் நாளை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அறிவித்திருந்ததால், இப்போது இந்த போட்டி இன்று நடைபெறும்.
ரிசர்வ் நாளின் விளையாட்டு நிலைமைகளின்படி, இன்று இந்த போட்டி முழுவதுமாக 50-50 ஓவர்களில் நடைபெறும். எனினும், இந்த போட்டி இன்றுடன் நிறைவு பெறுமா? இன்றும் மழை வில்லனாகுமா? என்ற கேள்விகள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் உள்ளது. எனவே கொழும்பில் இன்று அதாவது ரிசர்வ் நாளில் வானிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று தொடங்கினால், விதிகளின்படி ஞாயிற்றுக்கிழமை எந்த இடத்தில் இருந்து ஆட்டம் தொடங்கும். அதாவது இந்திய இன்னிங்ஸ் 24.1 ஓவரில் இருந்து தொடங்கும். இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டம் இங்கிருந்து தொடங்கும், முழு 50 ஓவர் போட்டியும் நடைபெறும். பின்னர் பாகிஸ்தானும் 50 ஓவர்கள் முழுமையாக விளையாடும்.
ரிசர்வ் நாளில் கூட கொழும்பின் வானிலை முன்னறிவிப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. இன்று காலை முதல் அங்கு மழை பெய்து வருவதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என தெரியவில்லை. இருப்பினும், சூரிய ஒளிக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை அறிக்கையின்படி, மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்படலாம். அதாவது ரிசர்வ் நாளில் கூட மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கொழும்பில் மாலை 5 மணியளவில் மழை பொழிவதற்கு 80 வீதமான வாய்ப்புகள் உள்ளதாக Accuweather இன் அறிக்கை தெரிவிக்கிறது.
போட்டி அதன் வழக்கமான நேரத்தில் மாலை 3 மணிக்கு மட்டுமே தொடங்கும். அதேவேளை, Weather.com இன் படி, இன்று பிற்பகல் 3 மணி முதல் கொழும்பில் மழைக்கான சாத்தியக்கூறு 70 வீதத்திற்கு குறைவாக இருந்ததில்லை. இதனால் நேற்றை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலை 5.30 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு அதிகம்.
இதனிடையே தற்போது கொழும்பில் மழை பெய்து வருகிறது . இதனால் திட்டமிட்டபடி 3 மணிக்கு போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இதனை வைத்து பார்க்கும்போது ஓவர்கள் குறைக்கப்படலாம். இல்லையெனில் போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்படலாம். அப்படி கொடுத்தால் பாகிஸ்தானுக்கு தான் சாதகம்.
🚨 EXCLUSIVE Video from the Ground..!
Not a Good Sight for Cricket Fans😔#IndiavsPak #colomboweather#Colombo #PAKvIND #pakvsind2023 #PakvsInd #IndiaVsPakistan#INDvPAK#RohitSharma #Shaheen #ShadabKhan #ShaheenShahAfridi #ShaheenAfridi #BHAvsPAK #AsiaCup2023 #AsiaCup… pic.twitter.com/r07LuNza4B
— Cricbaaz Harry (@Cricbaazharry) September 11, 2023
Colombo Current Weather#PAKvIND#Colombo pic.twitter.com/wzyVZOaPa9
— Chaudhary Adeel Riaz (@Chadeelriaz) September 11, 2023
Raining in Colombo right now 💔.#IndiavsPak | #INDvsPAK | #PakvsIndia pic.twitter.com/fUtcqgnP29
— Ehtisham Siddique (@iMShami_) September 11, 2023