
இந்து சேவா மஹாத்சவ் நிகழ்ச்சி இந்து ஆன்மீக சேவை அமைப்பு சார்பாக புனேயில் தொடங்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது மக்களுக்கு சேவை செய்பவர்கள் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகின்றார்கள். சேவை தர்மத்தை கடைபிடிக்கும் போது மாறக்கூடாது எனவும், மனித மதம், உலக மதம் அதை சேவை உணர்வில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்து மதம் உலக அமைதியை வலியுறுத்துகி நிலையில் சிறுபான்மையினரை கவனித்துக் கொள்வதும் முக்கியம் என்று குறிப்பிட்டார். அதோடு நாம் உலக அமைதி கோஷங்களை எழுப்புகின்றோம். ஆனால் மற்ற இடங்களில் சிறுபான்மையினரின் நிலை என்ன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகள் மூலம் வருங்கால சந்ததியினை ஊக்குவிப்பதும் சேவை மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதும் நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்தியர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தங்கள் நாட்டை உலகிற்கு முன் மாதிரியாக முயற்சிக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரது வழிபாடுகளை மேற்கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். சிறுபமையினரின் பிரச்சனைகளை தீர்க்க இந்தியா அடிக்கடி அறிவுறுத்துகின்றது.
ஆனால் மற்ற நாடுகளில் சிறுபான்மையினர் என்ன வகை மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை இப்போது உலகம் பார்க்கின்றது இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே உத்தரபிரதேசம் ராஜஸ்தானிலுள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் தோற்றம் குறித்து இந்து அமைப்பினர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.