சீக்கிய மதத்தை இயக்கமாகக் கொண்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கனடாவில் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு இந்தியாவுடன் தொடர்புள்ளது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியிருந்தார். இதனால் இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

இந்தக் கொலை குறித்து இந்திய தூதரகத்திடம்  விசாரணை நடத்தப் போவதாக கன்னட பிரதமர் தெரிவித்திருந்தார். இதனால் இந்திய தூதரை கனடாவில் இருந்து வெளியேற இந்திய அரசு முடிவு செய்தது. மேலும் கனடா அதிகாரிகள் 6 பேரை இந்தியா வெளியேற்றியது. இதற்கிடையில் கனடா பிரதமர் நிஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ள வகையில் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கனடா செய்தியாளர்களுக்கு இந்திய தூதரக அதிகாரி சஞ்சய் வர்மா கூறியதாவது, நிஜார் கொலை வழக்கு குறித்து கனடா பிரதமர் எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் தெரிவிக்கவில்லை. அதை அவரே தெரிவித்து இருந்தார். அவர் தெரிவித்த கருத்தால் கனடாவிற்கு இந்தியாவிற்கும் இடையேயான உறவு தகர்க்கப்பட்டது. நிஜார் கொலைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு சஞ்சய் வர்மா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.