
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று 3 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் செபக் டக்ரா பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் பெற்றது. தாய்லாந்து அணியுடன் அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அரை இறுதி போட்டி வரை முன்னேறியதையடுத்து இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டனில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் வெண்கல பதக்கம் வென்றார். அரையிறுதியில் சீன வீரர் 21 – 16 மற்றும் 21 – 9 என்ற செட் கணக்கில் வென்றதால் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
வில்வித்தை போட்டியில் அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரன்ஜீத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. அங்கிதா, பஜன் கவுர் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் மூவரும் 6-2 என்ற கோல் கணக்கில் வியட்நாமை வீழ்த்தினர். ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 32 வெள்ளி, 36 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
🇮🇳 WINS A BRONZE IN SEPAK TAKRAW 🥉
The Women's Regu team has won a bronze at the #AsianGames2022 🔥⚡
Our ladies have showed an impeccable team spirit to win the spot on the podium. A big round of applause for them👏#Cheer4India#Hallabol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/HZ6XL1RV9I
— SAI Media (@Media_SAI) October 6, 2023