
கனடாவில் தமிழ் மாணவர் பிரணீத், தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாடும் போது ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரணீத், கனடாவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார். கடந்த வாரம் டொரண்டோ நகரில் உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் சென்ற போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
நிகழ்வு குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து பிரணீத்தின் உடலை ஏரியில் இருந்து மீட்டனர். இந்த துயர சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
பிரணீத்தின் உடலை இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வர குடும்பத்தினர் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கான உதவியை கனடா வாழ் இந்திய சமூகமும், அதிகாரிகளும் விரைந்து வழங்க முன்வந்துள்ளனர்.