
ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சென்றது இந்திய அணி. இந்திய அணி வெற்றி பெற்றதால், நாட்டிற்கு மேலும் ஒரு பதக்கம் (தங்கம்/வெள்ளி) உறுதியாகியுள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 24 ரன்களும், பர்வேஸ் ஹொசைன் எமன் 23 ரன்களும், ரகிபுல் ஹசன் 13ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர்.இந்திய அணியில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களும் எடுத்தனர். மேலும் அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னோய், சபாஷ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் மற்றும் திலக் வர்மா இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். இதில் திலக் வர்மா அதிரடியாக அரை சதமடித்தார். இந்திய அணி 9.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) 40 ரன்களும், திலக் வர்மா 26 பந்துகளில் (2 பவுண்டரி, 6 சிக்ஸர்) 55 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், நாட்டிற்கு மேலும் ஒரு பதக்கம் த(ங்கம்/வெள்ளி) உறுதியாகியுள்ளது.