
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப பரிமாணங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஏ. ஐ தொழில்நுட்பத்தை சினிமாவிற்கு மட்டுமல்லாமல் இன்னும் பல மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்த அறிவியல ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தென்கொரியாவில் குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதமாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிநீர் சுத்திகரிக்கும் முறையை ஆராய்ச்சி செய்தனர்.
இந்நிலையில் கொரியன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டாக்டர் சன் முன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றது. மேலும் இந்த ஏ. ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரில் உள்ள மாசுகளை நீக்கி 0.9R2 மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு நீரில் உள்ள பொட்டாசியம் சோடியம் கால்சியம் போன்ற முக்கிய அயனிகளின் செறிவு தன்மையை கண்டறியவும் உதவும் என்று கொரியா அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.