
ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனுஹூ காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், அதற்கான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் காலை காவல் நிலையத்திற்கு சென்ற மூர்த்தி 7.45 மணி அளவில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.