
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெற்றோருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் வெளியூரில் வேலை பார்க்கும் நிலையில் அவர் தன் தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது மாணவியின் கழுத்தில் தங்கச் செயின் இல்லாததால் அது பற்றி அவளிடம் தாயார் கேட்டார். அதற்கு சிறுமி பல்வேறு காரணங்களை கூறிய நிலையில் ஒரு கட்டத்தில் உண்மையை கூறிய நிலையில் அதை கேட்ட அவருடைய அம்மா அதிர்ச்சியில் உறைந்து போனார். அதாவது கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே வயதுடையவர்கள் என்பவதால் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த மாணவி தனியாக இருக்கும் நேரத்தில் சிறுவன் அங்கு சென்றும் மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளான். அப்போது சிறுமியை சிறுவன் ஆபாசமாக புகைப்படம் எடுத்த நிலையில் தன்னுடைய காதலன் தானே என எண்ணி சிறுமி அதை கண்டுகொள்ளாமல் விட்டார். இந்நிலையில் அந்த ஆபாச புகைப்படத்தை காண்பித்து சிறுவன் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று சிறுமியை வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த தங்க சங்கிலியை அவர் மாணவனிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறுவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.