
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமான “கோயமுத்தூர் மாப்பிள்ளை” என்ற இன்ஸ்டா நபர் சமீபத்தில் பொதுமக்களிடம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன்படி கோயம்புத்தூர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்ற நபரிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பேட்டி கொடுத்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன் தனது கழுத்தில் புலி நகம் கொண்ட செயின் அணிந்திருந்ததால் வனத்துறையினர் அதிரடியாக அவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர்.
இதில் அவரது வீட்டில் இரண்டு புள்ளி மான்களின் கொம்புகள் மற்றும் புலின் நகம் பதித்த செயின் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.