
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன் என்பவர் ரயிலை விட்டு இறங்க முயற்சி செய்துள்ளார். இவரது செயலை கண்ட காவல்துறையினர் அவரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் 13 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் சென்னைக்கு சென்று வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொண்டு வந்தது வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 13 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.