
நடிகை ஸ்ரீலிலா, நிதின் நடிப்பில் வரும் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் ராபின்ஹூட். இந்த படத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வானர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து டேவிட் வார்னர் டோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருக்கிறார் .
ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய ரசிகர்களை அதிகமாக கவர்ந்த டேவிட் வார்னரை இந்த வருடம் எந்த அணியும் ஏலத்தில் வாங்காத நிலையில் அவர் தெலுங்கு சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறா. இந்த படத்தில் கேமியோ காட்சியில் அவர் சுமார் 2. 50 நிமிடங்கள் வருவதற்கு 2.50 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.