கொல்கத்தாவில் வரும் 24ம் தேதி பத்து அணிகள் கலந்து கொள்ள உள்ள 12 ஆவது ஐபிஎல் தொடரானது தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூவை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் டெல்லி மற்றும் கொல்கத்தாவின் கேப்டன்களாக யார் நியமிக்கப்படுவார்கள்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக  அஜிங்க்யா ரகானேவை நியமித்து கொல்கத்தா நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர்  நியமிக்கப்பட்டுள்ளார்.