ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது திடீரென மைதானத்தில் வைத்து மும்பை மற்றும் டெல்லி அணியின் ரசிகர்கள் மோதிக்கொண்டனர். அவர்கள் பயங்கரமாக ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட நிலையில் உடனடியாக போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

 

மேலும் இந்த மோதலுக்கான காரணம் சரிவர தெரியாத நிலையில் இந்த வீடியோ மட்டும் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.