
பத்து அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐபிஎல் போட்டியானது நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் மூன்றாவது கட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் ஆடி வருகின்றன. சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மும்பை அணியின் தொடக்கவீரர் ரோகித் சர்மா மற்றும் ரியாஸ் ரிக்கெல்ட்டன் களம் இறங்கினார்கள்.
சென்னை அணிக்காக கலில் அகமது முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை மும்பை தரப்பில் ரோகித் சர்மா எதிர் கொண்டார். ரோகித் சர்மா ரன் குவிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்கு பந்துகள் பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்த நிலையில் இந்த போட்டியில் டக் அவுட் ஆனதால் ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் (18) ஆன வீரர் என்ற மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். முன்னதாக தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அதிக முறை டக் அவுட் ஆகி உள்ளனர்.