அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ரிங்கு சிங் பேட்டிங்கால் ஜொலித்தார்..

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அதிரடியாக ஆடினார்..  அவர் தனது டி20 சர்வதேச இன்னிங்ஸில் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். ரின்கு தொடக்கத்தில் பொறுமையாக அடி வந்தநிலையில், கடைசியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு பந்து வீச்சாளர்களை மிரட்டினார்.

டி20 சர்வதேச அறிமுக போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து அனைவரின் மனதையும் வென்றார் ரிங்கு சிங். இந்தியாவின் கடைசி இரண்டு ஓவர்களில் ஷிவர் துபேயுடன் இணைந்து 42 ரன்கள் எடுத்தார். ரிங்குவின் அதிரடியான இன்னிங்ஸுக்குப் பிறகு, அவரை புகழ்ந்து ட்விட்டரில் மீம்ஸ்களை பொழிகின்றனர் ரசிகர்கள்.  

ரிங்கு சிங் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கினார் :

இந்திய அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட டக் வொர்த் லூயிஸ் முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிங்குவால்  கடந்த முதல் டி20 போட்டியில் மழை காரணமாக பேட்டிங்கில் களமிறங்க முடியவில்லை.

இந்நிலையில் 2வது டி20 போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ பால்பிர்னி அதிகபட்சமாக அபாரமாக பேட்டிங் செய்து 51 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். 2 தொடக்க ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது..

இப்போட்டியில் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 58 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 40 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து இந்திய இன்னிங்ஸின் கடைசி ஓவர்களில் ரிங்கு சிங்கும், ஷிவம் துபேயும் அபாரமாக பேட்டிங் செய்தனர். இப்போட்டியில், இன்னிங்ஸின் 19வது ஓவரில் மேட்ச் ஃபினிஷரின் ஃபார்மை வெளிப்படுத்திய ரின்கு சிங், இந்த ஓவரில் 22 ரன்கள் எடுத்தார்.

https://twitter.com/Hum_tum14/status/1693300288550265196

ரிங்கு 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்து 180 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். அவரது இன்னிங்ஸுக்குப் பிறகு, மேட்ச் ஃபினிஷர் மகேந்திர சிங் தோனியுடன்  ரிங்குவை ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.. இப்போட்டியில் ரிங்கு சிங் ஆட்ட நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/IconicKohIi/status/1693317255894016083

https://twitter.com/Diggu33/status/1693344643147288838