
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குட்டிவிளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகத்தின் இரும்பு மனிதர் ஆவார். தற்போது கண்ணன் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான இரும்பு மனிதர் போட்டியில் கலந்து கொண்ட கண்ணன் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார். இந்நிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கண்ணன் 370 கிலோ எடையுள்ள காரை தூக்கி நடந்து செல்லும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இதனையடுத்து கண்ணன் 370 கிலோ எடையுடைய காரை 25 மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு நடந்து சென்ற போது நண்பர்களும், பொதுமக்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அவரை ஊக்குவித்தனர். பின்னர் சாதனை படைத்த கண்ணனை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். இவரது சாதனை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.