மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் பாட்டி ஒருவர் இளைஞரை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மலேசியாவில் உள்ள ஒரு ரோட்டோர உணவகத்தில் நண்பர்களுடன் இளைஞர் ஒருவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வயதான பாட்டி அந்த இளைஞரிடம் சிகரெட் கேட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் அதற்கு மறுத்து, எந்தவித பதிலும் கூறாமல் இருந்ததால் அந்தப் பாட்டி இளைஞரை முதுகில் பல முறை அடித்து விட்டு சென்ற காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த வீடியோவை பதிவிட்ட பதிவாளரே அந்த வயதான பாட்டி உணவோ, பணமோ கேட்கவில்லை. சிகரெட் கேட்டதால் தான் அவரை கண்டுகொள்ளாதது போல் இருந்ததாக தெளிவுபடுத்தியுள்ளார். அவர் வயதானவர் மேலும் அவரது உடல் நலனுக்காக தான் சிகரெட் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அந்த பாட்டி நடந்த விதத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த இளைஞர் அமைதியாக நடந்து கொண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்களின் மனநிலை, சமூக ஆதரவு போன்ற பிரச்சனைகளை மலேசிய சமூக நலத்திட்டங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.