சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர் பாவ-புண்ணியம், மறுபிறவி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பலரும் அதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மூடநம்பிக்கை குறித்து பேசிய வரை அதை மேடையில் கேள்வி கேட்ட ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டுக்கு தெரிவித்தார். அதோடு என் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்திற்கு வந்து என் ஆசிரியரை அவமானப்படுத்தியதற்காக மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து மகாவிஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் அசோக் நகர் பள்ளியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். தான் ஓடி ஒளியவில்லை என்றும் இன்று மதியம் சென்னை வருகிறேன் என்றும் குறிருந்தார். இந்நிலையில் மகாவிஷ்ணுவை கண்டித்த ஆசிரியர் சங்கர் கிறிஸ்தவர் என பேஸ்புக்கில் தகவல் பரவியது. இதுதொடர்பாக பகிரப்பட்டு வரும் ஸ்கிரீன்ஷாட் வதந்தி என்று அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

இத்தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் அந்தோணி பர்ணாந்து என்ற பேஸ்புக் பக்கம் ஆசிரியர் சங்கருடையது இல்லை. அந்தோணி பர்ணாந்து என்பவர் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு விமர்சித்து வந்த ஒரு நபர், மகாவிஷ்ணுவை கண்டித்து பேசி ஆசிரியர் சங்கரை பாராட்டி அவரது போட்டோவை நேற்று ப்ரோபைல் போட்டோவாக மாற்றி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.