
என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேடையிலேயே நம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கேட்கிறார்.. ஏன் தமிழ்நாட்டில் எதுவுமே கொடுக்கவில்லையே என்று…. மோடி ஐயா பிறகு மைக்கை பிடித்தார்கள். அவர்கள் சொன்னார்கள்…. மோடி ஐயாவை பற்றி உங்களுக்கு தெரியும். மிகவும் நாகரிகமாக அரசியல் பேசக்கூடிய, அற்புதமான மனிதர் அவர்கள் சொன்னார்கள்…
ஐயா 10 ஆண்டுகள் இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2004 இல் இருந்து 14 வரை டெல்லியில் இருந்து மாநில அரசுக்கு வந்த பணம் 30 லட்சம் கோடி. 9 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். நாங்கள் மாநிலங்களுக்கு கொடுத்த பணம் 120 லட்சம் கோடி, நான்கு மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறோம்.
ஸ்டாலின் ஐயாவுக்கு புரிஞ்சுதா ? என்பது தெரியவில்லை. ஆனால் உட்கார்ந்திருந்தார்கள் மேடையில்…. அதன் பிறகு மோடி ஐயா சொன்னார்கள். ரயில்வே துறைக்கு UPA காங்கிரஸ் காலத்தில் எவ்வளவு பணம் வந்திருக்கிறதோ ? எங்களது ஆட்சி காலத்தில் மூன்று மடங்கு ரயில்வேக்கு கொடுத்திருக்கிறோம். ரோடு போடுவதற்கு எவ்வளவு பணம் காங்கிரஸ் காலத்தில் வந்துச்சோ, இரண்டரை மடங்கு பணம் உங்களுக்கு கொடுத்திருக்கிறோம் அப்பவும் முதலமைச்சர் அவர்கள் எதுவுமே கேட்காமல் உக்கார்ந்து கொண்டு இருந்தார் என விமர்சனம் செய்தார்.