மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு கார்பைடு என்ற தொழிற்சாலையில் இருந்து விசவாய்வுகள் வெளியானது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக 337 மெட்ரிக் டன் நச்சு கழிவுகள் அங்கேயே சேகரித்து பட்டு இருந்தது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அந்த கழிவுகளை 12 கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டது. தார் நகரில் உள்ள பிதாம்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது சிலர் காவல் துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால், காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதோடு தனியாக மாட்டிய இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கழிவுகளை எரிக்கும் அதிநவீன ஆலை ஒன்று பிதாம்பூரில் உள்ளது. அந்த ஆலயத்தின் தரை மட்டத்திலிருந்து 25 அடி உயரத்திற்கு மேல் ஒரு சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.கடுமையான அறிவியல் நெறிமுறைகளை பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. இந்த கழிவை மணிக்கு 90 கிமீ வேகத்தில் அளித்தால் 150 மூன்று நாட்களில் முற்றிலும் அழிக்க முடியும், அதேபோன்று வேகத்தை மணிக்கு 270 கிமீ என அதிகரித்தால் 51 நாட்கள் ஆகும்.