தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “தி கோட்” என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் இது வழக்கம்போல் உள்ள இரட்டை வேடமாக இல்லாமல் விஜயை மிகவும் இளைய வயதில் காட்டியிருக்கிறார்கள். இதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் 50 வயது உள்ள ஒருவர், 20 வயதில் எப்படி இருப்பாரோ அதேபோன்று காட்ட முடியும். இந்த படத்தில் சிறிய வயது விஜையாக நடித்துள்ளது, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் அபாஸ் கான் என்பவர் தான். இவரை  நடிக்க வைத்து டீ ஏஜிங் மூலம் விஜய் முகத்தை பொருத்தி காட்சிகளை எடுத்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு வெங்கட்பிரபுவுக்கு ரியாஸ் நன்றி கூறிருந்தார்.