
ஹரிஹரன் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் பாடியுள்ளார். இதுவரை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 15000 பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் என்னை தாலாட்ட வருவாளா, அவள் வருவாளா, கொஞ்ச நாள் பொறு தலைவா போன்ற பல பாடல்கள் 90ஸ் கிட்ஸ் களின் மனம் கவர் பாடல்களாகும். இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றவர் ஆவார்.
இந்த நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பார்வையாளர்கள் வரிசையில் ஒருவராக பாடகர் ஹரிஹரன் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, இந்த வீடியோவில் கேரளா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் ஹரிஹரன் திடீரென மேடையை நோக்கி வந்து அருண்… அருண்… என கத்தியுள்ளார். இதனால் அவரை காவல்துறையினர் பிடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மேடையில் ஏறியதும் கண்ணீர் விட்டு ஹரிஹரன் காதலுக்கு மரியாதை படத்தில் தான் பாடிய “என்னை தாலாட்ட வருவாளோ” என்ற பாடலை பாடியுள்ளார் . மேலும் உடல்நிலை சரியில்லாதவர் போல் மிகவும் மோசமான தோற்றத்தில் இருந்ததால் அனைத்து ரசிகர்களும் அவரை அதிர்ச்சியில் பார்த்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பாடகர் ஹரிஹரனுக்கு என்ன தான் பிரச்சனை? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாடகர் ஹரிஹரன் நான் சும்மா அனைவரையும் பிராங்க் செய்தேன் என பதில் கூறியுள்ளார்.